கண்டிசன்கள் அவ்வளவுதானா? இன்னும் இருக்கா.? மனைவி மீது உச்சகட்ட கோபத்தில் தனுஷ்.?
Author: Rajesh20 May 2022, 4:19 pm
சினிமா கெரியரில் உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் தனுஷ். தமிழைத் தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லா இடங்களிலும் பிரபலமாகி இருக்கிறார். இதற்கிடையில் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது, பலரையும் அதிர்ச்சியடைச்செய்தது.ஆனால் என்ன காரணம் என்று இதுவரை இருவரும் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், பல்வேறு காரணங்கள் இணையத்தில் சுற்றி வருகின்றது.
இதற்கிடையில் தனுஷ் அவ்வபோது அவரது மகன்களை சந்திப்பதும் தன்னுடன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதுமாக இருந்துள்ளார். அப்படி ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன்களுடன் இணைந்து தனுஷ் எடுத்த புகைப்படம் டிரண்டானதோடு தனுஷ் தான் மகன்கள் மீது பாசமாக இருப்பதாகவும், மகன்களுக்கும் அப்பாவை தான் பிடிக்கும் என்பதுபோலவும் செய்திகள் பரவ தொடங்கியது.
இதனால் கடுப்பான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தானும் மகன்கள் மீது பாசமாக இருப்பது போல் போட்டோ எடுத்து வெளியிட்டார். ஆனால் பலரும் அந்த போட்டோ மிகவும் செயற்கையாக இருப்பதாகவும், உண்மையான பாசம் தெரியவில்லை எனவும் விமர்சனம் செய்திருந்தனர்.
இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இனி மகன்களை பார்க்க நடிகருக்கு ஏகப்பட்ட கண்டிஷன் போட்டுள்ளாராம். அதில் முதல் கண்டிஷனே மகன்களை சந்திக்கும்போது அவர்களுடன் இருப்பது போன்ற போட்டோ எதுவும் எடுக்கக் கூடாது என்பது தானாம். அப்படியே எடுத்தாலும் அதை சோசியல் மீடியாவில் ஷேர் செய்யக்கூடாதாம். மகன்கள் மீது உள்ள பாசத்தால் நடிகரும் இந்த கண்டிஷன்களுக்கு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாராம் தனுஷ்.