அஸ்வினுக்கு பதில் இனி இவரா..ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றியை ருசிக்குமா..!
Author: Selvan25 December 2024, 9:48 pm
இந்திய அணியின் புதிய சுழல் பந்துவீச்சாளர்
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியின் போது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தன்னுடைய சர்வேதச கிரிக்கெட் போட்டியின் ஓய்வை அறிவித்தார்.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளதால் மீதம் இரண்டு போட்டிகளில் அஷுவினுக்கு பதிலாக மாற்று வீரரை இந்தியா அறிவித்துள்ளது.
முதலில் அக்ஷர் படேல் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில்,அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் தற்போது அவர் இந்தியாவில் இருக்கிறார்.இதனால் இந்திய அணி அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக 26 வயதான தனுஷ் கோட்யானை தேர்வு செய்துள்ளது.
இதையும் படியுங்க: சாண்டாவாக களம் இறங்கிய எம்.எஸ் தோனி…உற்சாகத்தில் ரசிகர்கள் ..வைரலாகும் புகைப்படம்.!
இவர் ரஞ்சி ட்ராபி மற்றும் உள்ளூர் போட்டிகளில்,அற்புதமாக விளையாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.இவர் அஷுவினை போல் வலது கை சுழற்பந்துவீச்சாளராக மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவதால்,இந்திய அணி இவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பதால் இவருக்கு பிளையிங் லெவனில் விளையாட வாய்ப்பு குறைவாகவே உள்ளது.இந்தநிலையில் நாளை நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா,ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.