இனி அப்படி பண்ணா சரிவராது.. ரூட்டை மாற்றிய தனுஷ் : முக்கிய முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan28 March 2022, 7:29 pm
நடிகர் தனுஷ் விவகாரத்து செய்தது பேச்சுபொருளாக மாறியது. ஆனால் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றாலும், இந்த தாக்கம் அவருடை திரையுலக கேரியருக்கும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி எதிர்மறை விமர்சனத்தையே பெற்றது. கார்த்திக் நரேன் எடுத்த படம் என்றாலும், படத்தின் கதையில் தனுஷ் தலையீடு இருந்ததால் படம் தோல்வியை தழுவியதாக கூறப்பட்டு வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
அதே சமயம் வெற்றி மாறனிடம் சென்று தன்னை வைத்து படம் இயக்க கூறியதாகவும், இப்போதைக்கு வாய்ப்பில்லை என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக ஜகமே தந்திரம், மாறன் ஆகிய இரண்டு படமும் ஓடிடியில் வெளியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம் நானே வருவேன்.
அதற்கு செல்வராகவன் – தனுஷ் -யுவன் கூட்டணி என்பதே காரணம். மேலும், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர் தனுஷ் படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் டிவி ராமர் மற்றும் நடிகர் ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன்பு நடிகர் தனுஷ், பா.பாண்டி என்ற படத்தை நடிகர் ராஜ்கிரணை வைத்து பா.பாண்டி என்ற படத்தை இயக்கிருந்தது குறிப்பிடத்தக்கது.