செருப்பு தைத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் : போண்டா சுட்டுக் கொடுத்து ஆதரவு திரட்டிய திமுகவினர்…!!

Author: Babu Lakshmanan
14 February 2022, 1:37 pm

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் களைகட்டிய பிரச்சாரம் செருப்பு தைத்து திமுக வேட்பாளர் வாக்குசேகரித்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் பல்வேறு வகையான நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக  7வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.முகமது யூசுப், பொதுமக்களுக்கு செருப்புத் தைத்துக் கொடுத்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து, தாராபுரம் நகர தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக திமுக 7வது வார்டு எஸ். முகமது யூசுப் அவர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.

அப்போது, மாவட்ட தலைவர்  சிவக்குமார், மாவட்ட செயலாளர் முருகானந்தம், கார்த்திக், நகர பொறுப்பாளர் கார்த்தி, சதீஷ், அசோக், சீனீ, குண்டடம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ், திருப்பதி மற்றும் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சோலை கடைவீதி பகுதியில் பேக்கரி ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு போண்டா சுட்டு கொடுத்து திமுக வேட்பாளர் முகமது யூசுப் பிற்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி