தாராபுரம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை ஊழியர்கள், குப்பைக்குள் வீசிச் சென்ற சம்பவம் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு உள்நோயாளி வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரை காண்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனை ஊழியர்கள் முதியவரை வார்டில் இருந்து அழைத்து வந்து அவரை வீல் சேரில் வைத்து கொண்டு வந்து அரசு மருத்துவமனை பிணவறை காம்பவுண்ட் சுவர் வெளிப்பகுதியில் உள்ள சாலையில் குப்பைக்குள் குப்பையாக தூக்கி வீசி சென்றுள்ளனர்.
இதனால் அந்த முதியவர் உயிருக்கு போராடிய நிலையில், ஈக்கள் மொய்க்க மழையில் நனைந்தபடியும் நாய்கள் அவரைச் சுற்றி குறைத்துக் கொண்டிருந்தது. மேலும் அந்த நபரின் மீது மருத்துவமனை கழிவு பொருட்கள் கொட்டப்பட்டன.
இதனால், இந்த ஆதரவற்ற முதியவரை யாரும் காப்பாற்ற வரவில்லை. இதைப் பார்த்த சக நோயாளிகள் இப்படியும் நடக்குமா? தாராபுரம் அரசு மருத்துவமனையில் என்ன நிர்வாகம் நடத்துகிறார்கள், உயிருடன் உள்ள ஒரு மனிதனை இவ்வளவு கேவலமாக நடத்துகிறார்களே என ஆதங்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அலட்சியமாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் நடந்து கொள்ளும் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் குப்பையில் வீசப்பட்டு கிடக்கும் முதியவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனவும், பல்வேறு தரப்பு மக்கள் சமூக அலுவலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.