தருமபுரி அருகே 2 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சிந்தல்பாடி அருகே உள்ள அம்பாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த விஷ்வா (16) என்ற சிறுவன் சிந்தல்பாடி அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவர் அதே பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தையை கடையில் திண்பண்டங்கள் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்றுள்ளான்.
குழந்தையின் வீட்டின் அருகே உள்ள ராஜா என்பவரின் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அப்போது, குழந்தை அழ தொடங்கி உள்ளது. இதனால் விஷ்வா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு வெளியே வந்த குழந்தையின் தாத்தா மேலே சென்று பார்த்து உள்ளார். அப்போது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக குழந்தையை மீட்டு சிந்தல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
அப்போது, குழந்தைக்கு அதிக அளவு இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் படி தர்மபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், அரூர் டிஎஸ்பி ஜெகன்நாதன் தலைமையிலான காவலர்களான சரண்ராஜ், சிவலிங்கம் ஆகியோர் அக்கிராமத்திற்கு சென்று, பெரியம்மா வீட்டில் பதுங்கி இருந்த விஷ்வா வை பிடித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.