காதல் கேட்குதா உனக்கு.. பேச்சு கொடுத்து கொண்டே சதக்.. சதக்.. பிரியாணி கடை ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து..!

Author: Vignesh
27 July 2024, 5:13 pm

தர்மபுரி ஜெட்டி அள்ளி பகுதியைச் சேர்ந்த வர் ஜாவித் மகன் முகமது ஆசிப்(27). இவர் டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார். இன்னும் திருமணமாகவில்லை. இவர் கடந்த மாதம் இலக்கியம்பட்டியில் உள்ள பிரபலமான பிரியாணி கடையில் வேலைக்கு சேர்ந்து பணி யாற்றி வந்தார். நேற்று இரவு, வழக்கம் போல் வேலை செய்து கொண்டு இருந்த போது, திடீரென கடைக்குள் புகுந்த 4 பேர் கும்பல், ஆசிப்பை கத்தி யால் சரிமாரியாக குத்தி விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர்.

இதனால், கடையில் பரபரப்பு ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆசிப்பை, உடன் வேலை செய்ப வர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து தர்மபுரி டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு நடத்தினர். இதனிடையே, மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், சம்பவ இடத் துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

முதற் கட்ட விசாரணையில் ஆசிப், காதல் விவகாரத்தில் குத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், நேற்று இரவு தர்மபுரி நகரில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ