பாஜக கொடிக்கம்பத்தில் கொடியை அறுத்து எரிந்த மர்ம நபர்கள் ; வெளியான சிசிடிவி காட்சி.. தர்மபுரியில் பதற்றம்..!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 10:34 am

தர்மபுரி அருகே மோளையானூரில் கொடி கம்பத்தில் இருந்த பாஜக கட்சியின் கொடியை மர்ம நபர் அறுத்து எரிந்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரில் கடந்த சில தினங்களுக்கு முன் மண்டல் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் புதிதாக பாஜக கட்சி சார்பில் கொடி கம்பம் நடப்பட்டு, அதில் பாஜக கட்சியின் கொடி ஏற்றப்பட்டது

இந்நிலையில் மோளையானூரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்றப்பட்ட பாஜக கட்சியின் கொடியை மர்ம நபர் ஒருவர், கடந்த 22ம் தேதி இரவு 10:30 மணியளவில் கொடி கம்பத்திலிருந்து அறுத்து ஏரியப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

https://player.vimeo.com/video/784301360?h=d9a6391818&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?