இடி தாக்கியதால் தீயில் நாசமான கோழிப்பண்ணை… சுமார் 7,500 கோழிகள் தீயில் எரிந்து சாவு.. கண்ணீர் விட்டு கதறி அழுத உரிமையாளர்!!
Author: Babu Lakshmanan25 March 2023, 12:57 pm
தருமபுரி ; அரூர் அருகே அதிகாலை கோழி பண்ணை மீது இடி தாக்கியதில் கொளுந்து விட்டு எரிந்த கோழி பண்ணை சுமார் 7,500 கோழிகள் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் பகுதியில் உள்ள மலைதாங்கி கிராமத்தில் திருப்பதி, என்பவருக்கு சொந்தமான 360 அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட கோழி பண்ணையில் 7,500 கோழிகள் வளர்த்து வந்தார். அதிகாலை நேரத்தில் இடிதாக்கியதில் கோழி பண்ணை முழுவதும் எரிந்த நிலையில், ஏழுமலையின் அண்ணன் லட்சுமணன் பார்த்து பதறடித்து ஓடி தனது தம்பியிடம் தகவலை சொல்லி இருக்கிறார்.
திருப்பதி மற்றும் இவரது மனைவி நீலாவதி எரிந்து கொண்டிருக்கும் கோழி பண்ணைக்கு சென்று கதறி அழுதனர். உடனடியாக திருப்பதியின் அண்ணன் மகன் பிரபு, அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் அருட் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து சாம்பலானது.
இந்த தீவிபத்தில் 7500 கோழிகளும் எரிந்து நாசமானது. மேலும் எரிந்து கொண்டிருந்த தீயினை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் ஒவ்வொரு கோழிகளும் 2,1/2 கிலோ இருந்ததாகவும், இந்தக் கோழி பண்ணையை வைத்து தான் நாங்கள் பிழைப்பு நடத்திக் கொண்டு வந்ததாகவும், இதுவும் எரிந்து நாசமானதால் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது என்று கதரை அழுதனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.