தமிழகம்

’கலெக்டர் நான் சொல்றதத்தான் கேட்கனும்..’ திமுக நிர்வாகி பேசியதாக வெளியான ஆடியோ.. அண்ணாமலை கேள்வி!

தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளர் தர்ம செல்வன் அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக வெளியான ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுகவில் கட்சி ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு, கடந்த வாரம் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி, தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக தர்ம செல்வன் என்பவர் தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன், கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை ஆகியுள்ளது.

இவ்வாறு தர்மபுரி கிழக்கு மாவட்டச் பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியதாக கூறப்படும் ஆடியோவில், “மாவட்டத்தில் எந்த அதிகாரிகளும் என்னை மீறி செயல்படக் கூடாது. நீங்கள் நினைக்கும் ஆட்களைச் சொல்லி மாற்ற முடியாது. நான் லெட்டர் வைத்தால்தான் மாற்ற முடியும்.

மாவட்ட ஆட்சியர், எஸ்பி என அரசு அதிகாரிகள் வரை அனைவரும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். எந்த அதிகாரியும் நான் சொல்வதை மீறி கு** கூட விட முடியாது. கேம் விளையாட இங்கு இடமில்லை. கேம் விளையாடினால் கதை முடிந்துவிடும்.

இதையும் படிங்க: நான்தான் சம்மனைக் கிழிக்கச் சொன்னேன்.. சீமான் மனைவி ஆவேசப் பேட்டி!

நான் சொல்வதை கேட்கும் நபர்களுக்கு மட்டுமே இங்கு இடம் உண்டு. கேட்காத பட்சத்தில், அவர்கள் உடனடியாக இங்கிருந்து தூக்கியடிக்கப்படுவார்கள். எந்த அலுவலகத்தில் எந்த விஷயம் நடந்தாலும் எனக்கும், ஒன்றியச் செயலாளருக்கும் தெரிய வேண்டும். ஒரு அதிகாரிகூட நான் சொல்வதைக் கேட்காத பட்சத்தில் இங்கு இருக்கமாட்டார்கள்” என உள்ளது.

இந்த நிலையில், இந்த ஆடியோவை மேற்கோள்காட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே?

மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

கல்யாணம் ஆகும் என காத்திருந்த நாயகி… 49 வயதிலும் முரட்டு சிங்கிள்!!

திருமணம் செய்து கொள்ளாமல் பல பிரபலங்கள் இன்று வரை சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் உள்ள நடிகை காதலும்…

8 minutes ago

இனிமேல் அது நடக்காது…காதல் குறித்து மனம் திறந்த சமந்தா.!

கம் பேக் கொடுக்கும் சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா,இவர் நாக சைதன்யாவை…

14 minutes ago

பெற்ற தாயே பிள்ளைகளின் படுக்கைக்கு அனுமதி.. தந்தையால் சிக்கிய மனைவியின் கள்ளக்காதலர்கள்!

சென்னையில், பெற்ற தாயே பிள்ளைகளை பாலியல் ரீதியாக உறவுகொள்ள அனுமதி அளித்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை:…

18 minutes ago

நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ…மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தரமான சம்பவம் இருக்கு.!

அடுத்தடுத்து வில்லன் ரோல்களில் நடிக்கும் அருண் விஜய் தமிழ் சினிமாவில் பல கமர்சியல் படங்களை இயக்கி ரசிகர்களை குதூகலப்படுத்தி வருபவர்…

1 hour ago

பக்கத்து வீட்டுச் சிறுவன் மீது ஆசை.. 35 வயது பெண் செய்த பகீர் காரியம்!

கேரளாவில், 14 வயது சிறுவனைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்ததாக 35 வயது பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து…

2 hours ago

விஜய் படத்துக்கு தடை… பகடைக்காயாகும் எஸ்கே : சினிமாவில் அரசியல் விளையாட்டு!

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் தனது கட்சியை அறிவித்த விஜய்,…

2 hours ago

This website uses cookies.