ஒகேனக்கல்லில் மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு… 195 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 4:20 pm

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலுள்ள மீன் விற்பனை கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை ஆய்வாளர் திடீர் ஆய்வில் 5 கடைகளில் சுமார் 195 கிலோ கெட்டுப் போன அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா தளத்தில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து அருவிகளை பார்த்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்தும், பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து சாப்பிட்டு செல்கின்றனர்.

கடந்த மாதம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலுள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வந்ததும், அதனை உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்து கெட்டுப்போன மீன்களை அளித்தனர்.

இந்நிலையில், மீண்டும் இன்று மாவட்ட ஆட்சியரின் கி. சாந்தி உத்தரவின் பேரில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா அறிவுறுத்தலின் பேரில், பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை பணியாளர்கள் ஒன்றிணைந்து திடீர் ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து மீன்கள் மீது பார்மிலின் கெமிக்கல் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்பொழுது மீன்களில் எவ்வித பார்மிலினும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அனைத்து கடைகளிலும் சோதனையிட்டதில், 5 கடைகளில் இருந்து தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 195 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு மீன்கள் அளிக்கப்பட்டன.

மேலும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!