தருமபுரி அருகே சந்துக்கடைகள் நடத்தக்கூடாது என தெரிவித்து வரும் ஒற்றை குடும்பத்தினருக்கு பில்லி, சூனியம் வைத்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தில் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து தர்மபுரி செல்லக்கூடிய ஒரு முக்கிய சாலையாக உள்ளது. இதன் அருகே அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருவதால், இங்கு உள்ள போதை ஆசாமிகள் சாலையின் அருகே அமர்ந்து மதுபானங்களை அருந்துவதும் அங்கேயே குடித்துவிட்டு மட்டையாகுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இது மட்டுமின்றி அருகிலேயே பத்துக்கும் மேற்பட்ட சந்து கடைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் மற்றும் சந்துக்கடைகளால் தினம்தோறும் இவ்வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான பெண்கள், பெண் குழந்தைகள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இப்பகுதியில் உள்ள ஜெயலட்சுமி என்பவருடைய வீட்டின் அருகே சந்துக்கடை ஒன்று செயல்பட்டு வருவதால் இரவு நேரங்களில் நேரம் காலம் பார்க்காமல் கதவைத் தட்டி மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.
இதனால் ஜெயலட்சுமி என்பவருடைய வீட்டின் முன்பு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், இதுதான் சந்துக்கடை என நினைத்து ஜெயலட்சுமியின் வீட்டின் கதவை தட்டுகின்றனர்.
ஜெயலட்சுமிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளதால் இதுபோன்ற குடிபோதை ஆசாமிகளால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே வாழ்ந்து வருவதாகவும், இதை கேட்கும்பொழுது சந்து கடை நடத்தும் உரிமையாளர் ராஜம்மாள், தங்களை அவதூறாக பேசுவதாகவும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார் ஜெயலட்சுமி.
மேலும், இதை தட்டிக் கேட்கும் பொழுது இரவு நேரத்தில் திருநீரைக் கொண்டு வரும் ராஜம்மாள், தன் வீட்டின் அருகே தெளித்து செல்லக்கூடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என வேதணையுடன் தெரிவித்தார் ஜெயலட்சிமி. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சந்து கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்கள் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் ஜெயலட்சுமி.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.