பட்டப்பகலில் ஆசிரியை உள்பட 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு ; கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது… அரூரில் பயங்கர சம்பவம்!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 2:10 pm

அரூரில் பட்டப் பகலில் ஆசிரியை உட்பட மூன்று பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபரை கள்ளக்காதலியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரிப் மனைவி பேகம், 58 வயதுடைய இவருடைய கணவர் உயிரிழந்த நிலையில், தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கீழ் வீட்டில் பேகம், குடியிருந்து வந்த நிலையில், மேல் வீட்டை ஷகிலாபானு என்பவருக்கு கடந்த ஒன்றறை வருடங்களுக்கு முன்பு குடியிருப்பதற்காக வாடகைக்கு கொடுத்துள்ளார்.

ஷகிலாபானுவின் கனவர் சாதிக்பாஷா, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில், பேகம் என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். குடியிருந்த நாள் முதல் இன்று வரை மூன்று மாதங்கள் மட்டுமே வாடகை பணம் கொடுத்ததாகவும், மீதம் உள்ள மாதங்களுக்கு வாடகை பணம் கொடுக்காத நிலையில், வீட்டின் உரிமையாளர் பேகம் இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பேகத்திற்கும், ஷகிலாபானுவிற்கும் வீட்டு வாடகை பணம் தொடர்பாக வாய்தகராறு ஏற்பட்டதால், ஷகிலாபானுவின் கள்ளக்காதலன் பாஷாவை வரவழைத்துள்ளார். வீட்டின் உரிமையாளர் பேகத்திடம் குடிபோதையில் வந்த பாட்ஷா, சத்தமிட்டு தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார்.

அப்போது, எதிர் வீட்டைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஜெரின்தாஜ் என்பவர் பண்டிகை நாட்களில் வம்பு செய்கிறீர்கள் என்று கேட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த பாஷா, மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து ஜெரின்தாஜ் கழுத்தில் வெட்டியுள்ளார். மற்றும் வீட்டின் உரிமையாளர் பேகத்தையும் முதுகிலும் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்த அதே வீட்டில் குடியிருந்த ஜான்பாஷா மனைவி ஷகிலா (38) என்பவர் தடுக்க முற்படும்போது அவரையும் கையில் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளார். மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜெரின்தாஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பேகம் அளித்த புகாரின் பேரில், அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரை வெட்டிவிட்டு தப்பியோடிய பாஷாவை நேற்று இரவு கைது செய்து, அவருக்கு தூண்டுதலாக இருந்த ஷகிலா பானுவையும் கைது செய்தனர். குடிபோதையில் வெட்டிய பாஷாவை இன்று அரூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், பாட்ஷாவிற்கு தூண்டுதலாக இருந்த சகிலாபானுவை சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…