ஆட்சி செய்ய கையாலாகாதவர் தான் ஸ்டாலின்… நலத்திட்ட உதவிகளுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு : கேபி அன்பழகன் ஆவேசம்

Author: Babu Lakshmanan
23 January 2023, 2:06 pm

தருமபுரி : நலத்திட்ட உதவிகளுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு என்றும், ஆட்சி செய்ய கையாலாகாதவர் ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன் பேசும்போது, நிர்வாக திறமையற்ற, ஆட்சி செய்ய கையாலாகத முதல்வர் தான் மு.க.ஸ்டாலின் என்றும், பாலக்கோட்டில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமிக்க திராணி உண்டா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எதிர்கட்சியாக திமுக இருந்தபோது ஒருநிலைபாடும், ஆளும் கட்சியாக வந்த பிறகு வேறு நிலைபாடும் கொண்டுள்ளதாகவும், அதிமுக கொண்டு வந்த எண்ணற்ற நலதிட்டங்களுக்கு மூடு விழா செய்து வருவதாகக் கூறிய அவர், திமுக 20 மாத கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஆவேசமாக பேசினார். இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்