இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் சடலமாக மீட்பு – தற்கொலையா? கொலையா?..

Author: Vignesh
24 August 2024, 11:57 am

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே உள்ள குக்கல்மலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(32) லாரி ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். இவரது, மனைவி ஸ்ரீதேவி ( 24) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஆறு வயது குழந்தையும் ஹாசினி என்ற மூன்று வயது குழந்தையும் உள்ளனர்.

கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஸ்ரீதேவி தனது பெரிய குழந்தையின் காலில் தனது காலுடன் ரிப்பனை கட்டிக்கொண்டு சிறிய குழந்தையுடன் அருகே உள்ள பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இது குறித்து, அவரது கணவர் அளித்த தகவலின் பேரில் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மூன்று சடலங்களையும் கைப்பற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பொம்மிடி போலீசார் சடலங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர். இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • gangai amaran explained the copyrights issue on good bad ugly எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்