“என்னது! கோவில் உண்டியலில் 90 கோடி காணிக்கையா?”- அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

Author:
29 June 2024, 4:26 pm
Quick Share

தருமபுரி அருகே முனியப்பன் கோயில் உண்டியலில் 90 கோடி ரூபாய்க்கான காசோலை இருந்ததை கண்டு, அறநிலையத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பிலியனுர் அக்ரஹாரம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோயில் அமாவாசை மற்றும் மார்கழி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக, முனியப்பன் கோயிலில் அன்னதானம் போடுவதற்காகவே ஓர் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.அந்த உண்டியல் மாதந்தோறும் திறக்கப்பட்டு காணிக்கை வருவாய் கோயில் கணக்கில் பதிவு செய்வார்கள். இந்நிலையில், முனியப்பன் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு, தருமபுரி அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது.அப்போது, உண்டியலில் இருந்த ஒரு காசோலையை பார்தவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

அந்த காசோலையில், 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் என போட்டிருந்தது. தருமபுரியில் உள்ள சவுத் இந்தியன் வங்கியியில் கணக்கு வைத்துள்ள மகேந்திரன் என்பவரின் பெயரில், அந்த செக் கோயில் உண்டியலில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை கோயில் உண்டியலில் போடும் அளவிற்கு மகேந்திரன், கொடை வள்ளலா? அல்லது, கவனம் ஈர்ப்பதற்காக போடப்பட்ட செக்கா? என அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் முடிவில் தான் இந்த காசோலை உண்மையா இல்லையா என்பது தெரிய வரும்.

Views: - 90

0

0

Leave a Reply