தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி மரணம்… கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 4:30 pm
Quick Share

தவறான சிகிச்சையால் நர்சிங் கோமாவிற்கு சென்ற நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், கோட்டாச்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி அருகே சோலைக்கொட்டாய் லாலாக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ். இவரது மகள் காயத்ரி (18), நல்லம் பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்த காயத்ரி வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து, அவரை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ஒட்டுக் குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு, காயத்ரி மயக்க நிலைக்கு சென்றார். இதையடுத்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது, காயத்ரி சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், காயத்ரியின் தந்தை தங்கராஜ் மற்றும் உறவினர்கள், ஊர் பொது மக்கள் திரண்டு வந்து தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் தங்கராஜ் கூறியிருப்பதாவது: எனது மகள் காயத்ரி, முதலாமாண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி வயிறு வலிப்பதாக கூறிய தால், தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்தோம். அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் ஒட்டுக் குடல் கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து எனது மகள் மயக்கமடைந்தார். உடல்நிலை மிகவும் மோசமானது. தர்மபுரி, சேலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. எனது மகளுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வரும் காயத்ரியை நேரில் பார்வையிட்டு, அவரது பெற்றோரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கோமாவில் இருந்த மாணவி உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 316

    0

    0