ஆட்சிக்கு வராமலேயே நல்ல திட்டங்களை பெற்றுக் கொடுத்தது பாமக : சௌமியா அன்புமணி பிரச்சாரம்…!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 5:12 pm

ஆட்சிக்கு வராமலேயே நல்ல திட்டங்களை பெற்றுக் கொடுத்தது பாமக என்றும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பெற்று கொடுத்தது பாமக என்று தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்களிடையே அவர் பேசியதாவது :- நல்ல திட்டங்களை போராட்டங்கள் மூலம் பெற்றுக் கொடுத்தது பாமக. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பாமக தான் பெற்று கொடுத்தது.

மேலும் படிக்க: ரங்கராஜனா…? ராமலிங்கமா..? பிரச்சாரத்தின் போது குழம்பிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்..!!!

அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது, தர்மபுரி மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தார். தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றவும், வேலை வாய்ப்புக்காக சிப்காட் அமைக்கவும், மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க: சிறையில் இருந்து கொண்டு செந்தில் பாலாஜி சிக்னல்.. கோவையில் கடையை விரித்த அமைச்சர் : அண்ணாமலை பகீர்!

ஒவ்வொரு ஊரிலும் 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆரத்தி எடுத்து, பூக்கள் தூவி அவரை வரவேற்றனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!