சாலையில் போட்டி போட்டு ஓடிய பேருந்துகள்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து ; தந்தை, மகள் பலி!!
Author: Babu Lakshmanan21 February 2023, 1:32 pm
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தனியார் பேருந்தும், கல்லூரி பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் சாலையோரம் இருந்த தந்தை, மகள் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் கர்ணன் (40). இவர் கடத்தூர் பேருராட்சியில் கடைகள் மற்றும் வாகனங்களுக்கான சுங்க வரி வசூலிக்கும் ஒப்பந்ததரார். வழக்கம்போல் தனது மகள் சாசிகா (9), மகன் பிரம்மபுத்திரன்(4) ஆகியோருடன் கடத்துார் மின்வாரிய அலுவலக அருகே உள்ள பழைக்கடையில் வசூல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, தனியார் பேருந்து கடத்தூரிலிருந்து தருமபுரி சென்ற போது, தர்மபுரியில் இருந்து கடத்தூருக்கு வந்த தனியார் மகளிர் கல்லுாரி, பேருந்து ஒட்டுனர் நிலை தடுமாறியதில் தனியார் பேருந்து மீது உரசி சாலையோரம் இருந்த மரத்தின் கிளையில் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி பேருந்து நின்று கொண்டிருந்த கர்ணன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது மோதி இழுத்து சென்றது.
இதில் சம்பவ இடத்திலேயே கர்ணன் மற்றும் அவர் மகள் சாசிகா ஆகியோர் பலியானார்கள். மகன் பிரம்மதேவன் பலத்த காயத்துடன் தருமபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அங்கு இருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடத்தூர் காவல்துறையினர் கர்ணன் மற்றும் அவரது மகள் சாசிக்கா இருவரின் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய தனியார் மகளிர் கல்லூரி பேருந்து ஓட்டுநரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்தில் இறந்தது அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.