போலீஸா..? ரவுடியா..? சிறுமியை கர்ப்பமாக்கிய காவலர்… அடுத்தடுத்து குற்ற சம்பவம் ; SSI அதிரடி பணியிடை நீக்கம்

Author: Babu Lakshmanan
21 November 2023, 9:18 am

தர்மபுரி அருகே பாலியல் புகாரில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வந்தவர் சகாதேவன் (வயது 55). இவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், நேற்று பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் சகாதேவனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார்.

பாலியல் புகாரில் சிக்கி, கைதாகி உள்ள சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சகாதேவன் மீது ஏற்கனவே சில புகார்கள் எழுந்தன. இவர் பணியில் இருந்த போது, தர்மபுரி மாவட்ட பல்வேறு காவல் நிலையங்களில், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனங்களை தன்னிச்சையாக செயல்பட்டு தனியாருக்கு விற்பனை செய்ததாக, விதிகளை மீறி, வேறு நபர்களுக்கு விற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ