சந்துக்கடைகளுக்கு மொத்தமாக மது பாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் கடையின் 2 சூப்பர்வைசர்கள் உட்பட 7 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்.
தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் காவல்துறையினர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதியமான் கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இருந்து மொத்தமாக சந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவல்துறை துறையினர் மற்றும் டாஸ்மார்க் மேலாளர் விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணை மேற்கொண்டதில் அரசு மதுபான கடை 2821 என்ற கடையில் பணிபுரியும் கோவிந்தன் மற்றும் முருகள் ஆகிய 2 சூப்பர்வைசர்களும், சதாசிவம், சரவணன், ராமதாஸ், திருமால், தீர்த்தராமன் உள்ளிட்ட 7 பேரும் கள்ளதனமாக விற்பனை செய்யும் சந்து கடைகளுக்க விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மகேஸ்வரின் 2 சூப்பர்வைசர்கள் உட்பட 7 பேரையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடையில் பணிபுரியும் பணியாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.