ஸ்கூட்டியை லாக்கராக பயன்படுத்துபவர்களே உஷார்… 50 ஆயிரம் ரொக்கம், 12 சவரன் நகை அபேஸ் ; சிசிடிவி காட்சிகளை விசாரணை!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 12:42 pm

தர்மபுரியில் அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணம், நகையை மர்ம நபர்கள் இலாவகமாக திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலராக உள்ள ஜெயலட்சுமியின் கணவர் வெங்கடேசன். இவர் அரூர் நான்கு ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் இருந்து தனது 12 பவுன் நகையையும், 50000 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சிறிது தூரம் வந்த அவர், தனது நண்பரின் கடைக்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார்.

அவர் உள்ளே சென்ற ஒரு நிமிடத்திற்குள் அவரை பின் தொடர்ந்து வந்த காவி வேஷ்டி கட்டிய மர்ம நபர் ஒருவர் தங்களின் கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்து ஸ்கூட்டியின் சீட்டுகடியில் வைக்கப்பட்ட 50000 ரூபாய் பணத்தையும், 12 பவுன் நகையையும் திருடி சென்றுள்ளனர்.

அதன் பின் அவர் அரூர் பஸ் ஸ்டாண்டுக்கு சென்று வண்டியின் சீட்டை திறந்து பார்த்துள்ளார். அப்போது, பணம், நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://player.vimeo.com/video/820783241?h=aa9db9e4ae&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 413

    0

    0