தருமபுரி அருகே போடப்பட்ட 3 நாட்களிலேயே சாலையில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து வரும் நிலையில், ஆட்சியருக்கு கமிஷன் கொடுப்பதாக ஒப்பந்ததாரர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட இண்டமங்கலம் ஊராட்சி பி.கே.பள்ளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ராஜிகொட்டாய் முதல் கண்ணர்கரை வரை ரூ.11 லட்சத்து 65 ஆயிரம், மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து சாலை அமைப்பதற்காக முன்பேருந்த தார் சாலையை சாலையை பெயர்த்து அப்புறப்படுத்தினர்.
இதனைதொடர்ந்து புதிய தார் சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் அமைக்கப்பட்டது. மேலும் இரண்டு தளம் அமைக்கப்பட வேண்டிய நிலையில், இந்த சாலையில் ஒரு தளம் (சிப்ஸ்) மட்டுமே தார்சாலையை அமைத்து உள்ளனர். அப்போது, கிராம மக்கள் இரண்டு தளம் போடாமல் ஒரே தளத்தில் தார்சாலை அமைக்கப்படுவதால் தரம் இல்லை எனக்கூறி ஒப்பந்ததாரரை வேலை செய்ய வேண்டாம் என தடுத்து நிறுத்தினர்.
அப்பொழுது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள், நான் ஆட்சியர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் 2 சதவீத கமிஷன் தருகிறேன் எதுவும் செய்ய முடியாது என ஒப்பந்ததாரர் தெரிவித்ததாக கிராமங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தார்சாலை தரமாக அமைக்கப்படவில்லை தரமற்ற முறையில் ஒரே தளத்தில் சிறு ஜல்லி கற்களை கொண்டு தார்சாலை அமைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள் என வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் இதுவரை ஆய்வு செய்வதற்காக வரவில்லை.
இந்நிலையில், தார்சாலை முழுவதுமாக அமைத்து முடித்துள்ளனர். ஆனால் தார் சாலை அமைத்து 3 நாட்களிலேயே ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து வருகிறது. வாகனங்கள் அதிகமாக செல்வதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து தினமும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இந்த தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது என புகார் தெரிவித்தும், அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் தரமற்ற முறையில் உள்ள தார் சாலையை கையில் அள்ளி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த தார்சாலையில் கற்கள் பெயர்ந்து வருவதால் இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து இந்த தார் சாலையை தரமான முறையில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.