ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தல்… கொத்தடிமைக்காக இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி… 5 மணிநேரத்தில் நடந்த சம்பவம்!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 4:55 pm

ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை அடுத்த ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை சார்ந்த லட்சுமி மற்றும் அவரது மகன் முத்து இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணமலை சாலையில் உள்ள ஆலமரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் செங்கல் சூளை அதிபர், PCSP என்னும் பெயரில் செங்கல் உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் கடந்த 1 வருடத்திற்கு முன்பு 2,68,000 முன் தொகையாக பெற்றுக்கொண்டு தாயும், மகனும் வேலை செய்து கடனை கழித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த பொங்கல் திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு வந்த லட்சுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உடல் நிலை சீரானதும் வருவதாக செங்கல் சூளை நிர்வாகத்தினரிடம் கூறி இருக்கிறார்கள்.

அதை ஏற்றுக்கொள்ளாத செங்கல் சூளை உரிமையாளர் நேற்று மாலை 5 மணி அளவில் அடியாட்களுடன் வந்து மிரட்டி அடித்து, டாடா சுமோ வாகனத்தில் லட்சுமியை கடத்தி சென்று உள்ளனர் . மேலும், 5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டி விட்டு சென்று உள்ளனர். இதனால் பதட்டம் அடைந்த மகன் முத்து உறவினர்களுடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, காரிமங்கலம் காவல் துறையினர் லட்சுமியை மீட்க விரைந்து சென்றனர். செங்கல் சூளையில் லட்சுமியை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். அங்கிருந்து லட்சுமியை மீட்டு காரிமங்கலம் வந்தனர். மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பிரபு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கடத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் செங்கல் சூலை உரிமையாளர் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வாங்கி கடனுக்காக கொத்தடிமையாக பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 512

    0

    0