இரும்பு நாற்காலிகளில் கட்டப்பட்ட மனநலம் பாதித்த நபர்… வாகனங்களை உதைத்து தள்ளி அட்டகாசம் ; அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan20 July 2023, 3:40 pm
அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மனநல பாதிக்கப்பட்டவர் இருசக்கர வாகனங்களை கால்களால் உதைத்து தள்ளி கடும் ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் மேல் பாட்ஷாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவர் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது சொந்த ஊரான அரூர் மேல் பாட்ஷாப்பேட்டையில் உள்ள இவரது வீட்டை உடைத்து இவரது தாயை கடுமையாக தாக்கியிருக்கிறார்.
இதை பார்த்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இங்கு கடுமையான ஆபாச வார்த்தைகளால் பேசி அனைவரையும் பயமுறுத்தியதால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த நாற்காலியில் கைகளை கட்டி அமர வைத்தனர்.
அப்போது, திடீரென இவர் அமர்ந்திருந்த நாற்காலிகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களை கால்கலால் உதைத்து தள்ளி, பொதுமக்களை தாக்க முற்படும்போது, இவருடைய நண்பர்கள் அவரைப் பிடித்து மீண்டும் நாற்காலியில் அமர வைத்தனர். அதன் பிறகு மயக்க ஊசி செலுத்தப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மனைவி மற்றும் இவரது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு இவருக்கு மனநல காப்பகத்தில் சிகிச்சை அளித்து குணமடைய செய்ய வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.