Categories: தமிழகம்

சாதிய கருத்துகள் உள்ளதால் மாமன்னன் படம் பார்க்கவில்லையா? நிருபர்களிடம் கொந்தளித்த அன்புமணி!!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் நீர் பாசன திட்டங்கள் முழுமை அடைய வேண்டும் எனவும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள நீர் மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,அதிக அளவிலான நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த சில தினங்களாக உலக அளவில் சராசரி வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளதாகவும் இதனால் மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறோம் எனவும் கூறிய அவர், இதற்கு முக்கிய நீர் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் நீர் மேலாண்மை திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்தவித அரசியலும் இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக முதலமைச்சர் சித்ராமையா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அங்கு அணை கட்ட முடியாது என தெரிந்தும் மக்களை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் தன்மையை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 60 ஆண்டு கால திராவிட கட்சிகள் ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு எதுவும் செய்யவில்லை எனவும் மற்ற மாநிலங்கள் இலட்சக்கணக்கான கோடிகளை நீர் மேலாண்மைக்கு ஒதுக்கியும் தமிழகத்தில் வெறும் 8000 கோடி மட்டுமே நீர் பாசன திட்டங்களுக்காக ஒதுக்கி இருப்பதாகவும் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.

காவிரி ஆற்றில் மட்டும் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டினால் 170 டிஎம்சி வரை தண்ணீரை சேமிக்கலாம் என்றும் கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பணை கட்ட வேண்டும் என பாமக வலியுறுத்தினால் அரசு 10 குவாரிகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளதாகவும், தடுப்பணை கட்டினால் மணல் எடுக்க முடியாது என்பதால் அதனை கட்டவில்லை என்றும் விமர்சித்தார்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனப் பகுதிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டதாகவும் அண்மையில் கூட யானை மிதித்து ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியது ஏற்புடையது அல்ல எனவும் ஒவ்வொரு வீடுகளுக்கும் அவரை நேரில் அழைத்துச் செல்கிறேன் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவரை நேரடியாக கேட்கட்டும் என பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், தக்காளி விலை கடந்த மாதம் மிகக் குறைவாக இருந்த நேரத்தில் அரசு குளிர் பதன கிடங்குகள் அமைத்து இருந்தால் தற்போது அதனை சேமித்து வைத்து குறைந்த விலைக்கு தக்காளிகளை விற்பனை செய்திருக்கலாம் எனவும் எட்டு கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் தமிழக அரசு வெறும் 150 தக்காளி விற்பனை மையங்களை மட்டும் திறந்தால் அது போதுமானதா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதே போல் மதுவை திணிக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாகவும் ஏற்கனவே இருந்த செந்தில் பாலாஜிக்கு மாற்றாக தற்போது அமைச்சர் முத்துசாமி அந்தத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு சமூக அக்கறை உண்டு என்பதால் அதில் சீர்திருத்தம் செய்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார் .

எங்கு பார்த்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் மது கிடைக்கும் நிலை நிலவுவதாகவும் தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் 65 கடைகளை மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் மூடி இருப்பதாகவும் அனுமதி உடன் 4700 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 25 ஆயிரம் கடைகள் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைத்தார்.
சிறைச்சாலைகளில் போதை பொருட்கள் புழங்குவதாகவும் அனைத்து இடங்களிலும் தங்கு தடை இன்றி கஞ்சா புழக்கம் இருப்பதாகவும் முதல்வரிடம் இது குறித்து நேரடியாக பலமுறை சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் சுட்டி காட்டினார்.

இதேபோல் மேற்கு மண்டல காவல்துறை டிஐஜி தற்கொலை சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் இந்த சம்பவம் பொதுமக்களின் விவாதமாக இல்லாமல் தற்கொலைக்கான காரணம் குறித்து முழுமையாக அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடக்க இருப்பது அரசியல் கூட்டம் என்பதால் அதில் முதல்வர் கலந்து கொள்வது வேறு ஆனால் அங்கு மேகதாது அணை பிரச்சனை பற்றி அவர் அங்கு பேச வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு பாதித்தால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என்று தேர்தல் அறிக்கையில் கூறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுப்போம் என கூறுவதை ஏற்க முடியாது எனவும் அதிமுக மதுரை மாநாட்டிற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் எனக் கூறுவது அவர்களது தொண்டர்களை உற்சாகப்படுத்த மட்டுமே என்றும் கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி தெரிவித்தால் நன்றாக இருக்கும் எனவும் தமிழகத்தில் முதல்வரும் ஆளுநரும் ஒன்றாக செயல் பட்டால் மட்டுமே மக்களுக்கு நல்லது நடக்கும் என்றும் ஆளுநர்கள் நீதிபதிகளை போல் என்பதால் அவர்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும் அரசியல் பேசக்கூடாது என்றும் சுட்டி காட்டினார்.

தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தை பார்த்தீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை பார்க்கவில்லை அதற்கான நேரம் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறவே சாதிய கருத்துக்கள் அந்த படத்தில் இருப்பதால் படத்தை பார்க்கவில்லையா என செய்தியாளர் எதிர் கேள்வி எழுப்பவே, பாமக சாதியக் கட்சி இல்லை என்றும் தலித் ஒருவருக்கு பொதுசெயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பாமக மட்டுமே திமுக வழங்கியதா எனவும் பத்திரிகையாளர்கள் வன்மத்துடன் கேள்வி எழுப்பக் கூடாது என்றும் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே பாராளுமன்ற தேர்தல் பணியை துவங்கிவிட்டதாகவும் கூட்டணி குறித்த அறிவிப்பை தேர்தலுக்கு முன்பாக மட்டுமே அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

14 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

15 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

15 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

15 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

15 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

15 hours ago

This website uses cookies.