திருமணத்தை உறுதி செய்த நயன்தாரா.? சொந்த ஊரில் நேர்த்திகடன் செலுத்திய விக்னேஷ் சிவன்.! வீடியோ இதோ..!
Author: Rajesh23 May 2022, 4:32 pm
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கடைசியாக நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இருந்தது, படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட, நயன்தாரா திருமண வேலைகள் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறார் என கூறப்பட்டது.
இந்த நிலையில், விமானம் மூலம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவரும் திருச்சி விமான நிலையம் வந்தனர். அப்போது விமானத்தில் பணி செய்த பணியாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர் அப்போது உயரம் குறைவாக இருந்த பெண் செல்பி எடுக்க முயன்ற போது இதனை கண்ட சந்தோஷம் உடனடியாக அந்தப் பெண்ணிடம் செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்தார் இதனை கண்ட அந்த பெண் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.
அடுத்த மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர்கள் இருவம் கார் மூலம் விக்னேஷ் சிவனின் சொந்த ஊருக்குச் சென்றனர். பின்னர் இருவரும் கோயிலில் நேர்த்திகடனை செலுத்தினர். இதன் மூலம் இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்வார்கள் என்று உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.