வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்ததா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய விலை நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 8:45 am

சென்னை : கடந்த 126 நாட்களாகியும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் பட்ஜெட்டில் தினமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது பெட்ரோல் விலைதான். 2017ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்த பிறகு பெட்ரோல் – டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

பெட்ரோல் விலை இப்போது பல்வேறு நகரங்களில் 100 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43 ஆக உள்ளது. இன்று வரை 126 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகவே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், நஷ்டத்தைத் தடுத்து பிரேக் ஈவன் ஆகவே, 10 நாட்களில் பெட்ரோல் ஒரு லிட்டர் 12.1 ரூபாயும் டீசல் ஒரு லிட்டர் 15.1 ரூபாயும் உயர்த்தப்பட வேண்டும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி