அதிமுக விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டாரா? முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சொல்வது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 2:59 pm

அதிமுக விவகாரத்தில், மோடி தலையிட்டதாக கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, இந்த ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கு. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது; அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் அது ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் கூறுகையில், அதிமுக விவகாரத்தில், மோடி தலையிட்டதாக கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம். அது காலத்தின் கட்டாயம் என பேட்டி அளித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ