ஒருதலைபட்சமாக நடந்ததா காவிரி மேலாண்மை ஆணையம்? கல்லணையை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan17 June 2022, 5:54 pm
கல்லணையில் ஆய்வு செய்ய வந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை திரும்பிப் போ என வலியுறுத்தும் வகையில் கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ். கே. ஹல்தர் தலைமையிலான குழுவினர் தமிழகத்தில் நேற்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை மேட்டூரில் இந்த குழுவினர் ஆய்வு நடத்தினர் . இதை தொடர்ந்து இன்று மாலை இக்குழுவினர் கல்லணையில் ஆய்வு செய்ய உள்ளனர்
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுதாகவும், ஆணையத்தை கலைக்க வேண்டுமென வலியுறுத்தியும், ஆணையத்தின் தலைவரை ஹல்தார் ஒருதலைபட்சமாக கர்நாடக அரசுக்கு செயல்படுவதாக வலியுறுத்தியும் இந்த குழுவினரை திரும்பிப் போ கல்லணைக்கு இங்கு வர கூடாது என வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் மற்றும் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.