டெல்லியை காப்பியடித்ததா திமுக அரசு? 7 மாநகராட்சிகளில் அந்த வசதி : பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2023, 2:18 pm

தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று திமுக அரசு தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இருக்கிறது. அமைச்சர் பிடிஆர் காலை 10 மணிக்குத் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் கூறுகையில், சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும்” என்றார். ஏற்கனவே டெல்லியில் இதுபோல பொது இடங்களில் வைஃபை வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.

இப்போது தமிழ்நாட்டிலும் முதற்கட்டமாக இந்த ஏழு நகரங்களில் வைஃபை வசதி வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். இது வரும் காலங்களில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?