UNFIT அமைச்சர்னு சொன்னா என்னவா? அண்ணாமலை இதை அரசியலாக்கறாரு : கொந்தளித்த சிபிஎம் பாலகிருஷ்ணன்!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 6:53 pm

UNFIT அமைச்சர்னு சொன்னா என்னவா? அண்ணாமலை இதை அரசியலாக்கறாரு : கொந்தளித்த சிபிஎம் பாலகிருஷ்ணன்!

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தேர்தல் தயாரிப்பு பேரவைக் கூட்டம் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சி பி எம் தேர்தல் தயாரிப்பு கூட்டம் நடைபெற்று வருவதாகவும், வரக்கூடிய தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது என்றும் வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு 37 ஆயிரம் கோடி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் இன்றைவரைக்கும் மோடி அரசு ஒரு ரூபாய் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தை பாஜக அரசு ஓரவஞ்சனையாக மோடி அரசு பார்ப்பதாகவும் மூன்று நாட்கள் தமிழகத்திற்கு வந்த மோடி வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை ஒரு மணி நேரமாவது ஒதுக்கி சந்தித்து இருக்கலாம் என்றும்
அதிமுக ஒரு பக்கம் கூட்டணிக்காக கடையை போட்டு உட்கார்ந்து கொண்டு திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுமா என்று காத்திருப்பதாகவும் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது என்றும் இந்த தேர்தலில் கூடுதலாக இடங்களை ஒதுக்க வேண்டுமென கேட்டுள்ளதாகவும் விரைவில் தேர்தல் பணியை துவங்க உள்ளதாக பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாஜக அரசு மாநில அரசின் கூட்டாட்சி தத்துவத்தை பறிப்பது ஆளுநர் வைத்து மாநில அரசுக்கு இடையூறு வழங்குவதை கண்டித்து எல்லா கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமையில் டெல்லியில் 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் தமிழகத்தில் 45 இடங்களில் நடைபெற உள்ளதாகவும் தங்களின் கூட்டணியில் சீட்டு பிரச்சனையே இல்லை கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் ஆனால் கூடுதலான இடங்களை கேட்பதாக கூறினார்.

அதிமுகவில் கூட்டணிக்காக பல கட்சிகள் பேரம் பேசுவதாகவும், நாடாளுமன்றத்தில் எல் முருகனை டி ஆர் பாலு அன்பிட் அமைச்சர் என குறிப்பிட்டு பேசியதற்கு அண்ணாமலை இதில் அரசியல் செய்வதாகவும், இதை சொல்வதற்கு கூட ஒரு உறுப்பினருக்கு உரிமை இல்லையா என கேள்வி எழுப்பினர்.

அமலாக்க துறை பாஜகவின் இளைஞரனி போல் செயல்படுவதாக பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டினார். ஆட்சி அதிகாரத்தை எப்படி செய்யக்கூடாதோ ஜனநாயகத்தை அழித்து பாஜக செயல்படுகிறது.

தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் ஆனாலும் தேர்தல் கமிஷனை நம்பி உள்ளதாகவும் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது ஆறுதல் பரிசு மட்டுமே தான் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!