மதுரையில் மூன்றடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினி சிலையை பிரதிஷ்டை செய்து ரசிகர் ஒருவர் வழிபாடு நடத்தும் விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் என்ற இளைஞர் திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வருகிறார். இவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார். இந்நிலையில், வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வரும் கார்த்திக், தனது வீட்டின் ஒரு அறையை ரஜினிக்கு கோவிலாக வடிவமைக்கப்பட்டு, ரஜினியின் திரைப்படங்கள் அனைத்திலும் உள்ள காட்சிகளை அறையினுள் ஒட்டி வைத்தும், நாள் தோறும் ரஜினிக்கு தீபாராதனை, அபிஷேகம் செய்து வருகிறார்.
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் மூன்றடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினி சிலையை தயாரித்து, இன்று அந்த சிலைக்கு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவது போன்று ரஜினி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, பூஜை முடிந்த பின்னர் அச்சிலையை எடுத்து கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து, பால், பன்னீர் , இளநீர், சந்தனம் , மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார் ரசிகரான கார்த்திக். அவருக்கு உறுதுணையாக பெற்றோர்களும், அவரது மனைவியும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே உயிருடன் இருக்கும் நடிகருக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து, நாள்தோறும் அதற்கு அபிஷேகமும் , தீபஆராதனைகளும் செய்து வரும் கார்த்திக்கின் செயல் வினோதமானதே.
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
This website uses cookies.