DIE HARD விஜய் FAN…. லியோ படம் ஓடும் தியேட்டரில் திருமணம் செய்து கொண்ட தம்பதி ; கொண்டாடிய ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
19 October 2023, 11:35 am

புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் வெளியான நேரத்தில் திரையரங்கத்திற்கு உள்ளே வெங்கடேஷ் – மஞ்சுளா இருவர் மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரும் வடக்கு மூன்றாம் வீதியை சேர்ந்த மஞ்சுளா இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

வெங்கடேஷ் நடிகர் விஜயின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இவருக்கு நடிகர் விஜயின் தலைமையில் தனது திருமணம் நடைபெற வேண்டும் என விரும்பியுள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் பெற்றோர்களின் சம்மதத்தோடு இந்து முறைப்படி நாளை திருமணம் இருந்தது. விஜயின் லியோ திரைப்படம் வெளியாகும் நேரத்தில் விஜயின் திரைப்படம் படம் முன்பு தனது திருமணத்தை நடத்த வேண்டும் என மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பர்வேஸ் இடம் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

ரசிகரின் விருப்பத்தின் பேரில் இன்று விஜய் திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியான நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் கிறிஸ்தவ முறைப்படி, வெங்கடேஷ் மஞ்சுளா இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!