தலையில் முளைத்த முயல்… ரூ.10 ஆயிரத்தை தீட்டிய போலீஸ்… ஹீரோயிஷம் காட்ட நினைத்த புள்ளிங்கோவுக்கு கிடைத்த ஆப்பு..!!

Author: Babu Lakshmanan
29 November 2023, 9:46 pm

வித்தியாசமான ஹெல்மெட் அணிந்திருந்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்தை போலீசார் விதித்தனர்.

தென்காசியை அடுத்த குற்றாலம் பேருந்து நிலையம் அருகே வித்தியாசமான முறையில் இருந்த ஹெல்மெட்டை அணிந்தபடி, மோட்டார் சைக்கிளில் ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதனைக் கண்ட போலீசார், அந்த நபரை மடக்கி பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (23) என தெரியவந்தது.

இதையடுத்து, சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அவரின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 369

    0

    0