எழுந்து நிற்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனின் நடனம்.. தலைமை ஆசிரியருக்கு நன்றி கூறிய பெற்றோர்.. நெகிழ்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 1:59 pm

எழுந்து நிற்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனின் நடனம்.. தலைமை ஆசிரியருக்கு நன்றி கூறிய பெற்றோர்.. நெகிழ்ச்சி வீடியோ!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தெங்கியாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் ஜோதிபாஸ் என்ற தனியாக எழுந்து நடக்க முடியாத கை, கால்கள் செயலிழந்த வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவன் தனது தன்னம்பிக்கையின் மூலமாக உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா என்ற பாடலுக்கு அற்புதமான நடனமாடி அனைவரது கைதட்டல்களையும் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஊனம் எதற்கும் தடையில்லை என்பதை நிரூபித்த மாற்றுதிறனாளி பள்ளி சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…