கோவை சரக டிஐஜி தற்கொலை எதிரொலி… அவசர அவசரமாக கூடிய மதுரையில் டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் …!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 12:06 pm

மதுரை ; மதுரை சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் மன அழுத்தம் போக்குவது குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை சரகத்திற்கு உட்பட்ட மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக காவல்துறை இயக்குனர் (டிஜிபி) சங்கர்ஜிவால் தலைமையில் காவல்துறையினரின் மன அழுத்தம் போக்குவது குறித்தும், சட்ட ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை டிஐஜி விஜயகுமார் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நேற்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில், தமிழக டிஜிபி இன்று மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காவல்துறையினர் மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுப்பது, சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க வேண்டும் எனவும், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கிவருகிறார்

  • உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!