சீமான் நேரில் ஆஜராக உத்தரவு… டிஐஜி வருண்குமார் வழக்கில் திடீர் திருப்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2025, 8:01 pm

திருச்சி சரக்க டி.ஐ.ஜி. வருண்குமார் குறித்தும்,அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஐ.ஜி. வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படியுங்க: ஊசி ஏத்தி கொன்றுங்க.. போலீஸ் மட்டும் ‘அப்படி’ செஞ்சிருந்தா?.. தீக்குளித்தவரின் உறவினர்கள் கடும் வேதனை!

அந்த வழக்கிற்காக நீதிபதி உத்தரவின் அடிப்படையில் டி.ஐ.ஜி. வருண்குமார் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றம் எண் 4நீதிபதி(பொறுப்பு) பாலாஜி முன்பு நேரில் ஆஜராகினார்.

அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் என்னுடைய கடமையை செய்ததற்காக என்னை குறித்தும் என் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

மேலும், பொதுவெளியிலும் எங்களை குறித்து பேசினார். குறிப்பாக ஜாதி உள்ளிட்டவை குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் சீமான் பேசினார். மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார் என்பது குறித்து விரிவான வாக்குமூலத்தை அளித்தார்.

அதனை நீதிபதி பாலாஜி முழுமையாக பதிவு செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு ஜனவரி மாதம் 7ஆம் தேதிக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் டி.ஐ.ஜி வருண் குமார் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.

Varunkumar case Seeman Must To Appear in Court

இந்நிலையில் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4நீதிபதி பாலாஜி முன்பு நடைபெற்றது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!
  • Leave a Reply