சொந்த ஊரான தேனியில் டிஐஜி உடல்…. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்!!
Author: Udayachandran RadhaKrishnan7 July 2023, 4:51 pm
இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு நிறைவடைந்து அவரது சொந்த ஊரான தேனி ரத்தின நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் டிஐஜி விஜயகுமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மாலை 5 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என கூறப்படுகிறது.