2வது மனைவியுடன் உல்லாசமாக வாழும் கணவன்… தீக்குளிக்க முயன்ற முதல் மனைவி ; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
20 February 2023, 4:38 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 35). இவருக்கும், வீரைய்யா என்பவருக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. சில வருடங்களுக்கு முன்பு கணவன் வீரைய்யா, தனது தாய், தந்தை உதவியுடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மேலும் காளியம்மாளின் நகைகளை பறித்துக் கொண்டதாகவும், தொடர்ந்து தன்னையும், தன் மகனையும் இழிவு படுத்தி வந்ததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில், வழக்கிற்கும் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருவதாகவும் கூறி, காளியம்மாள் மற்றும் அவரது மகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

  • Vedhika Marriage News அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!