மத்திய அரசுக்கு எதிராக ஆவேசமாக பேசிய திண்டுக்கல் மேயர்… கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற பெண்கள்… திமுக கூட்டத்தில் சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 5:04 pm

திண்டுக்கல்லில் திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற பெண்களால் சலசலப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை கண்டித்தும், அங்கு பிரச்சனையை தீர்வுக்கு கொண்டு வராத மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, திமுக மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த பெண்களில் ஏராளமானோர் மேடையில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி பேசிக் கொண்டிருந்த போதே கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர்.

மேலும், கூட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பிய போது, ஏராளமானோர் அங்குள்ள கடைகள் மற்றும் சாலைகளில் தரையில் அமர்ந்திருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 391

    0

    0