களத்தில் இறங்கிய டூப் விஜய் : லைக்சுகளை அள்ளிய விஜய் மக்கள் இயக்கம்…!! கப்பு முக்கியம் பிகிலு..!

Author: kavin kumar
12 February 2022, 9:12 pm

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி 21வார்டில் விஜய் மக்கள் இயத்தின் சார்பில் உலக உருண்டை சின்னத்தில் போட்டியிடும் மகராஜ் என்ற விக்கி, நடிகர் விஜயைப் போல தோற்றம் கொண்ட டிக்டாக் பிரபலம் ஒருவரை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கச் சென்ற நடிகர் விஜய் முகக்கவசம் அணிந்த படி சைக்கிளில் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தார். கருப்பு சிகப்பு சைக்கிளில் சென்றார் எனவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றதாக பல்வேறு ஊடகங்களில் வெளியானது.

இதே போலவே இன்று டிக் டாக் பிரபலம் டூப் விஜய்யை வைத்து திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் 21 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் மகாராஜ் என்ற விக்கி வீதி வீதியாக சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார். பார்ப்பதற்கு விஜய் போலவே இருந்ததால் சிலர் திடீரென அதிர்ச்சிக்கு ஆளாகி பின்னர் சமாளித்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!