எடுத்தேன் பாரு ஓட்டம்.. கள்ளநோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட கைதி தப்பியோட்டம்..!

Author: Vignesh
27 August 2024, 12:02 pm

திண்டுக்கல், கொடைரோடு அருகே கள்ள நோட்டுகள் மற்றும் பணம் அச்சடிக்கும் எந்திரத்துடன் ஒரு கும்பலை அம்மையநாயக்கனூர் போலீசார் கைது செய்தனர்.

அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் கள்ள நோட்டு கும்பலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருப்பதி என்பவரை விருதுநகரில் பிடித்து அம்மையநாயக்கனூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலில் அடைப்பதற்காக திருப்பதியை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், திருப்பதியை போலீஸ் வாகனத்தில் ஏற்றும்பொழுது அங்கிருந்த போலீசாரை கீழே தள்ளிவிட்டு திருப்பதி தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடிய திருப்பதியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!