’பாஜகவின் கைத்தடி விஜய்’.. திண்டுக்கல் ஐ.லியோனி கடும் சாடல்!

Author: Hariharasudhan
16 December 2024, 2:53 pm

பாஜகவின் கைத்தடியாக, திராவிட கட்சிகளுக்கு எதிராக விஜய் செயல்படுகிறார் என திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் திமுக வடக்கு – தெற்கு நகரம் சார்பில், இளைஞரணிச் செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரும், திமுக நட்சத்திரப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி மேடையில் பேசினார்.

அப்போத் அவர், “ஒரு நடிகர் தனது மாநாட்டுக்காக ஏகப்பட்ட தலைவர்களுடைய படங்களை வைத்து பரபரப்பாக பேசிவிட்டு, 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திமுக இறுமாப்புடன் பேசி வருவதாக கூறினார். இப்படி திமுகவைப் பேசிய பல பேர் காணாமல் போய்விட்டனர்.

Dindigul I Leoni on AIADMK Status

பாஜகவின் கைத்தடியாக, திராவிட கட்சிகளுக்கு எதிராக விஜய் செயல்படுகிறார். இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய அதிமுகவை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டனர். ஜனவரி மாதம் முதல் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தவெகவுக்கு தாவல்? ஆதவ் அர்ஜூனா ஹிண்ட்.. திமுக அமைச்சரின் பல்டி!

ஆனால் கலந்தாய்வுக் கூட்டத்திலே ஏகப்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது. தொண்டர்களிடையே (அதிமுக) ஏகப்பட்ட அதிருப்தி நிலவி வருகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அனைத்துக் கட்சிகளையும் தோற்கடித்து, 200 தொகுதிகளில் வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.

  • Actor Soori new film Maaman update பாலா சிஷ்யன் பாணியில் சூரி.. பிரபல நடிகையுடன் வெளியான முக்கிய அப்டேட்!
  • Views: - 52

    0

    0

    Leave a Reply