விழுப்புரம் வெள்ளத்திற்கு விஜய் காரணமா? ‘கிழவிகள் சொன்னது..’ திமுக பிரமுகர் பேச்சு!

Author: Hariharasudhan
24 December 2024, 3:10 pm

விழுப்புரம் வெள்ளத்திற்கு விஜயின் தவெக மாநாடு காரணம் என திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.

சென்னை: சென்னை அடுத்த மாங்காடு பகுதியில் திமுக கூட்டம் நடைபெற்றது. இதில், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு மேடையில் பேசினார். அப்போது பேசிய அவர், “எனக்கு 65 வயது ஆகிறது. இத்துணை வருட அனுபவமும் இருக்கிறது.

ஆனால், விழுப்புரத்தில் வெள்ளம் வந்து நான் பார்த்ததே இல்லை. என் கண் முன்னாலே, அம்மன் கோயில் சிலைகள், ஆடு, மாடுகள் எல்லாம் அடித்துக் கொண்டு போனது. என்ன காரணம் என கேட்டபோது ஒரு கிழவி கூறியது, என்னைக்கு இந்த பாழாகப் போனவர்கள் விக்கிரவாண்டியில் வந்து மாநாடு போட்டார்களோ, அன்றைக்கு விளங்காமல் போனது.

இதனை நான் சொல்லவில்லை. இரண்டு கிழவிகள் பேசிக் கொண்டிருந்தனர், நான் ஒட்டுக் கேட்டேன். ஒரு ஊரில் நல்ல விஷயங்கள் நடந்தால் தான், அந்த ஊரில் நல்லது நடக்கும்” எனக் கூறினார். இது மறைமுகமாக, விஜயின் தவெக மாநாட்டைக் குறிப்பிட்டதால் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dindigul I Leoni says Villupuram flood caused by TVK Maanaadu

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், அக்டோபர் 27-இல் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை என்னும் கிராமத்தில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி வைத்து, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை அறிவித்தார்.

இதையும் படிங்க: கல்லூரி பேராசிரியர் கழிவறையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!

மேலும், இம்மாத தொடக்கத்தில் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, திண்டிவனம், செஞ்சி, மயிலம், மரக்காணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின. சுமார் 11 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கின. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!