வீட்டிலிருந்து ‘குப்’ பென்று வீசிய துர்நாற்றம்.. கதவை திறந்த போது போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Author: Vignesh20 June 2024, 12:52 pm
தனியார் மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் பெர்பெத் அழுகிய நிலையில் சடலமாக மீட்டது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை மோற்கொண்டு வருகின்றனர்.
மானாமதுரை சேர்ந்த 53 வயதான மருத்துவர் சுரேஷ் பெர்பெத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ராஜக்காபட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொது மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவமனை அருகே ராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இன்று மருத்துவர் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாடிக்கொம்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது மருத்துவர் சுரேஷ் பெர்பெத் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
மருத்துவருக்கு மது அருந்து பழக்கமும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாடிக்கொம்பு காவல் துறையினர் மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி அனுப்பப்பட்டது. மேலும், மருத்துவர் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.