ரோடு போட்டு கொடுங்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை 7 கிமீ டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்..!

Author: Vignesh
19 August 2024, 6:40 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர் காலனி. இந்த மலை கிராமம், கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், சாலை வசதி இல்லாததால் பெரியகுளம் வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், சின்னூர் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள கல்லாறு மற்றும் குப்பாம்பாறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக மலை கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்தது.

இந்த சூழலில், சின்னூர் காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மலைக்கிராம இளைஞர்கள் 10 பேர் ஒன்றிணைந்து டோலி கட்டி 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூக்கி சென்றனர். பின்னர் சின்னையம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.

மலைக் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இதுபோன்று தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று உயிரிழந்தார் . தொடந்து அப்பகுதியை மக்கள் கூறியதாவது இதே நிலை தொடர்ந்தால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் சாலை அமைத்து தரவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!