கண்ணை மறைத்த கோபம்… மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தை ; 2வது மனைவிக்கு கத்திகுத்து..!!

Author: Babu Lakshmanan
24 February 2023, 5:04 pm

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே குடும்ப பிரச்சனையில் மகன் தலையில் கல்லை போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சித்திரவு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதல் மனைவியுடன் தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தை இல்லை. இரண்டாவது மனைவியான பாக்கியலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மாதம் பாக்கியலட்சுமிக்கும், இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் பழனிச்சாமி பாக்கியலட்சுமியை கத்தியால் குத்தியதில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, இன்று பாக்கியலட்சுமி மகனான கணேசன் (30) ஆட்டோ ஓட்டுனர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தன்னுடைய மகன் என்றுகூட பாராமல் கணேசன் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பட்டிவீரம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Actress Suvalakshmi Latest News 2 மனைவி இருந்தும் நடிகை சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய பிரபல நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!
  • Views: - 446

    0

    0