செம்பட்டி அருகே, போடிகாமன்வாடியில், டூ வீலர் மெக்கானிக் நள்ளிரவில், ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதனால், பதட்டம் பரபரப்பு ஏற்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, போடிகாமன்வாடி வடக்கு தெருவில் செந்தில்குமார் (42) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் செம்பட்டியில், டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும் இவருக்கும், இடையே கடந்த சில ஆண்டுகளாக, கோவில் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நள்ளிரவு செந்தில்குமார் வீட்டில் குடும்பத்துடன் இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டிற்குள் திடீரென்று நுழைந்த, 10க்கும் மேற்பட்ட கும்பல், முன் விரோத காரணமாக, செந்தில்குமாரை கத்தியால் சரம் மாதிரியாக குத்தி உள்ளனர். இதில், உயிருக்கு பயந்து செந்தில்குமார் தெருக்கள் வழியாக, நள்ளிரவில் நடுத்தெருவிற்கு தப்பி ஓடி உள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து ஓடிய அந்த கும்பல், அவர் மீது சரமாரியாக கத்தியால் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்கல் நடத்து உள்ளனர். தகவல் அறிந்து செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செந்தில்குமாரை, 108 ஆம்புலன்ஸ்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செந்தில்குமார் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், போடிகாமன்வாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமார் உடலை கைப்பற்றி, பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு, கவிதா (38) என்ற மனைவியும், நவனித் (12) சந்திப் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். செந்தில்குமாரை நல்ல இரவில் தெருக்களில் விரட்டிச் சென்று சரமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட கொலையாளிகளை, செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இக்கொலை சம்பவத்தால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செந்தில்குமார் கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.