பட்டாசு விற்பனையில் முறைகேடு… கூட்டுறவு பண்டக சாலை நிர்வாகம் மீது பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
11 November 2023, 1:37 pm

கூட்டுறவு பண்டக சாலையில் பட்டாசு விற்பனையில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சுற்றுலாத்தலமான கொடைக்கானல் நகராட்சி. மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களுக்காக கொடைக்கானல் நகர்மையப் பகுதியில் கூட்டுறவு பண்டகசாலை பல வருடங்களாக இயங்கி வருகிறது.

பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு அரிசி பருப்பு மற்றும் சோப்பு முதல் அனைத்து பொருட்களும் இந்த பண்டக சாலையில் விற்பனையாகிறது. மேலும், பொதுமக்களும் அதிகம் ஆர்வமுடன் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனையாகும் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அரசு அனுமதி உடன் கூட்டுறவு பண்டகசாலையில் பட்டாசுகள் விற்கப்படுவது வழக்கம். கூட்டுறவு பண்டகசாலையில் வேலை செய்யும் நபர்கள், பட்டாசு வாங்கும் பொதுமக்களுக்கு ரசீது வழங்காமல் பட்டாசுகளை விற்பனை செய்து வந்தனர்.

இது தொடர்பாக, பொதுமக்கள் சமூக வலைதளங்களிலும், அதேபோல் நேரடியாக கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் நகர் மன்ற துணைத் தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து புகார் அளித்தனர்.

இதனை அடுத்து, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் மற்றும் நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் நேரடியாக வந்து பண்டகசாலை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 317

    0

    0